நகைச்சுவை

நடிகைகள் உடையில் வறுமை…!


தலைவர் மேடையில்;-
இந்த ஆட்சியில் மக்கள் போதிய உடை கூட கிடைக்காமல் வறுமையில வாடுகிறார்கள் என்பது த்ரிஷாவைப் பார்த்தாலே நன்றாகத் தெரிகிறது. ஏன் தமன்னாவைப் பார்த்தாலும் தெரிகிறது., இலியானாவைப் பார்த்தாலும் தெரிகிறது..!

===========================================
குடும்பக்கட்டுப்பாடு பற்றிப் பேச நம்ப தலைவரை கூப்பிட்டது
தப்பாப் போச்சு…!
ஏன்?
ஒருத்தருக்கு ரெண்டு மூணு குடும்பத்துக்கு மேல இருக்கக்கூடாதுன்னு பேசிட்டாரு..!

===================================================
தியேட்டருக்கு எதுக்கு முனிசிபாலிட்டி வண்டி போகுது?
படம் குப்பையாம்…அதான் அள்ளிட்டுப் போக…!

==========================================
புயல் சென்னைக்கு வருது..!
இல்லை, ஆந்திராவுக்கு போய்டுத்துன்னு டி.வில சொன்னாங்களே?
நான் சொன்னது என் மாமியார் ஊர்லேந்து வரறாங்கன்னு…!

==============================================