மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே.. உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே..
நினைத்தாலே சுகம்தானடீ... நெஞ்சில் உன் முகம்தானடீ...
காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது
அது காலத்தை ரசிக்கின்றது...
என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது...
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
தென்றலும் தீண்டவில்லை, குளிர் மழையும் தொடவில்லை என்னை, ஆனாலும் சிலிர்த்தேன். உன் அன்பு நினைவுகளில் நனைவதால்...
காத்திருக்கிறேன்... உன்னோடு கைகோர்த்து உலாவரும் வசந்த காலத்திற்காக...
தூக்கம் இன்றி தவிக்கும் இவன் விழிகள் பத்திரமாய் தூங்குவது எப்போது ? உன் மடி கொடு என் விழி தூக்கம் பத்திரமாகும்.
கையமர்த்தத் துடிக்கிறேன், என் நினைவுப்பெருவெளியெங்கும் அலையும் உன் நேசப்பட்டாம்பூச்சிகளை...
என்னில் நீ வந்து காதல்
அரங்கேற்றம் செய்யும்
நாள் எபோதடி கண்ணே..
ஜன்னல் காற்றாகி வா... ஜரிகை பூவாகி வா...
மின்னல் மழையாகி வா... உயிரின் ஊற்றாகி வா....
உயிரெழுத்துக்களாய் இருந்தும் அவைகள் உன் பெயரில் இல்லாததால் உயிரற்ற எழுத்துக்களாகவே தெரிகிறது எனக்கு!
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி...
இதயமே தெரியமா உனக்காகவே நானடி...
குழந்தையாவே இருந்திருக்கலாம் ஏன் தான் வளர்ந்தோமோ, தூக்கத்துக்கு நடுவுல சூச்சு வந்தா எழுந்து பாத்ரும் போவேண்டிருக்கு !
நல்ல வேல ரயில கண்டுபுடிச்சாங்க இல்லன்னா தண்டவாளம்லாம் வேஸ்ட்டா போயிருக்கும். #கேட்டதில் தாறுமாறா புடிச்சது.
ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இன்னும் கொஞ்சமே...
இங்கு நான் உளறும் அனைத்திற்கும் நானே முழுபொறுப்பாவேன் என சுயநினைவுடன் உளறிக்கொள்கிறேன்!.
உலகிலேயே ரெம்ப கொடூரமான உயிரினம் ஜட்டிக்குள்ள போன எறும்புதான் #பயவுள்ள என்னா கடி கடிக்கிறான்...
உறக்கம் திருடி ஏக்கம் தருகிறாய் கனவைத் திருடி கவிதை தருகிறாய் தனிமை திருடி நினைவு தருகிறாய் என்னைத் திருடி உன்னை தருகிறாய்
எல்லோரும் தனக்குள் ஓர் இதயம் இருக்கிறது என்பதை உணர்வதே யாரோ ஒருவரின் அன்பை ரசிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான் 
உயிரின் உயிரே உனது விழியில் இன்முகம் நான் காண வேண்டும். உறங்கும்போதும் உறங்கிடாமல் என் கனவிலே நீ தோன்ற வேண்டும்.
கதவை திற... காற்று வரட்டும் – நித்தியானந்தா, ஜிப்பை திற... சூச்சூ வரட்டும் – பத்மானந்தா
உன்பெயரை எங்கே யார் அழைத்தாலும் சட்டென்று திரும்பிப்பார்க்கிறேன் ஏனென்று எனக்கே தெரியவில்லை...
இரவு தானே இருட்டு தானே சத்தமாய் ஒரு முத்தம் கொடு எலி கத்தியது என்று சொல்லிவிடலாம் 
மெய் எழுத்தில் ஆரம்பிக்கும் தமிழ் வார்த்தை கேட்டான் நண்பன். #ங் என்றேன். ஓக்கே மச்சின்னுட்டான். டேய் நான் இன்னும் சொல்லவே இல்ல.
உன்னை மறந்து அடுத்த வேலையை பார்க்க போவதாய் எண்ணிக்கொள்ளும் மனதிற்கு எப்படி சொல்வேன்..? மீண்டும் உன்னைத்தான் நினைக்கும் வேலை இருப்பதை.
அடம்பிடிக்கும் மனதை அடக்கி விடுகிறேன் ஆனால் கெஞ்சும் மனதை ஒன்றும் செய்யமுடிவதில்லை..
எவ்வளவு நாள்தான் உனது புகைப்படத்தை மட்டும் கொஞ்சுவது ? சீக்கிரம் வா உனக்கான முத்தங்களை சேமிக்க இடம் போதவில்லை
தூரல் சிந்தும் மாலை நேரம் உன்னுடன் கைகோர்த்து நடக்க ஆசை கடற்கரை மணலில், நனைந்தபடி
நான் உன்னை காதலிப்பதற்கான கரணம் தெரிந்துவிட்டால், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்பதும் தெரிந்துவிடும்.
                  
 
 
  
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக