கவிதை பாட நேரமில்லை ஏன் என்றால் என் கவிதையோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.. #ஐ... வந்துருச்சி கவித.

எதிரேவந்த என்மீது இடித்துவிட்டுசெல்லும் எத்திராஜ் கல்லூரி பெண்ணைப்பார்த்து ஒன்று கேட்கிறேன், "ச்ச நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட பொறக்கல"

ஆறடிக்கு அமைவாக உயரம்.... பொதுவான நிறம்... முகத்தில்மெலிதான தாடி.... சோகமும் சுகமும் இனம்பிரிக்க முடியாத ஒரு ஈர்க்கும் சிரிப்பு.... ஒரு கண்ணாடி.... சினிமாக் காதலன் போல் இல்லா விட்டாலும் ஒரு சராசரிப் பெண்ணின் சராசரி எதிர்பார்ப்புகளை விட சற்று அதிகமாயிருக்கும் சராசரிப் பையன் அவன்....! ‍ #இது அவனின் அழகியல்!

எதையும் இலகுவாக எடுக்கும் குணம்... நண்பர்களுக்காய் மட்டும் துடிக்கும் நாடி... குரங்குத் தனமான சேஷ்டைகள்.... யாரைப் பற்றியும் கவலைப்படாது தன்னை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்கும் ஒரு புத்த(க)ன் அவன்...!
நன்றாகப் படிக்க முடிந்தாலும் சராசரியான‌ படிப்பு..... படிப்பை விட எலாவற்றிலும் ஆர்வம்.... எங்கு போனாலும் எவருடனும் இலகுவில் நட்பு....! #இது அவனின் பொதுவியல்!

இது தவிர பெண்கள் என்றாலே எல்லோருக்கும் இருக்கும் ஈர்ப்பு இவனில் சற்று அதிகம்..! காதல் என்ற மென்மையான உணர்வுகளை வார்த்தைகளாக்கும் பக்குவம் இதற்குக் காரணமாயிருக்கலாம்! அவன் கவிதைகளால் தத்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அவன் கவிதைகளில் உள்ள‌ வார்த்தைகளை விட அதிகமாயிருக்கும்.... (இதை வாசிக்கும் பெண்கள் அவனைப் பொறுக்கி என்று மட்டும் நினைக்க வேண்டாம்)

ஒருவன் எத்தனை பேரைப் பார்த்தாலும் எத்தனை பேரை ரசித்தாலும்......... பார்த்த பின்பும் ரசித்த பின்பும் அவனில் பளிச்சிடும் பெண்கள் சிலரே... அதில் சிலர் தவற ஒருத்தி மட்டும் காதலியாவாள்.....

அப்ப‌டி அவனில் பளிச்சிட்டவர்கள் பலர்.... காதலியானவர்கள்...???...!
எந்த ஒரு காதலும் எடுத்த எடுப்பிலேயே பக்குவப்படுப்வதில்லையே... சில காதல்கள் காதலித்த பின் பக்குவப்படும்....

சில பிரிந்து அடுத்த காதலில் பக்குவப்படும்... சில பக்குவப்படாமலேயே போகும்....!

இவன் மட்டும் என்ன விதிவிலக்கா? ‍இவன் இரண்டாம் ரகம்...!
முதல் காதல் தந்த பக்குவம் அடுத்த காதலில்..! இரண்டாம் காதல் தந்த பக்குவம் அதன் அடுத்த காதலில்...

இவன் யாரென்று தெரிகிறதா?? தடைகளை வென்றே சரித்திரம் படைப்பான் ஞாபகம் வருகிறதா??


மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டி பார்த்தேனே..
பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கி போனேனே...


இங்க ஒரு ஃபிகரோட ட்ரஸ் பார்த்ததும், அதே போல என் டார்லிங்க்கும் வாங்கிடனும்'னு தோணுது. #பிரச்சனை என்னனா யாரு டார்லிங்குங்கறதுல தான்.

எருமை போல் வளர்ந்திருக்கியே ஒழிய நீ இன்னும் குழந்தை தானடீ எனக்கு.

நீ கூந்தலை அள்ளி முடிகிற நேர்த்தி , நான் ரசித்த #அழகியல்

எங்கு தொடங்கினாலும் , இறுதியில் உன்னிடமே வந்து முடிகின்றன என் #எண்ணங்கள்



காற்றுக்குள் விழுந்த மழைத் துளி போல உனக்குள்ளே தொலைந்துவிட்டேன்.

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக