எந்த காதல் பாடல் கேட்டாலும் மனம் உன்னையும் என்னையும் சேர்த்து பார்க்கின்றது அந்த பாடலுடன்

நேற்று, நீ தூரத்து வின்மீனாய் கண்ணை பறித்தாய் இன்று அருகிலிருக்கும் சந்திரனாய் குளிர்ச்சி தருகிறாய் நாளை, நீ என்னை ஆளும் சூரியனாவாயோ!

தூங்காத விழிகள் ரெண்டு... உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.

உன் பேச்சை லயித்து உறங்குவதா அல்லது லயித்தபடி விழித்திருப்பதா என்ற குழப்பத்திலேயே விடிந்து விடுகிறது பொழுது..

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்.


காதல் என்பது அன்பின் வன்முறை. #பாடாய் படுத்துது.

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை. என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை.

உன்னிடமே உறைந்து விட்டேன் உயிரோடு கலந்து விட்டேன் உணர்வாக நீ இருக்க உறக்கமின்றி தவிக்கிறேனே..

என்னைத் தொலைத்துவிட்டு உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

முப்பொழுதும் உன் கற்பனைகள். சிந்தனையில் நம் சங்கமங்கள்.

காதலின் முதல் வேலையே... மூளையை முடக்குவது தான் போலும்!


நீ... அமைதியாய்தான் இருக்கிறாய், உன் அழகு தான் மிகவும் திமிர் பிடித்தது... அது என்னை அமைதியாயிருக்க விடுவதில்லை.
 
திரு/திருமதி மேயுற மாடு அவர்களே.. , திரு/திருமதி நக்குற மாட்ட ஏன் கெடுக்குறீங்க..? #எல்லோருக்கும் மரியாதை குடுக்கணும்னு பெரியவங்க சொல்லிருக்காங்கல்ல அதான்.
 
ஜோடியா படத்துக்கு வந்தா படம் பாருங்க, படம் காட்டாதீங்க-அட்வைஸ். #ஏன்னா.., எத பாக்கறது, எத விடரதுன்னு தெரில.
 
ஒரு பார்வை... ஒரு வார்த்தை... இரண்டும் கவியானதென்ன...
 
மு.காதலி "lets be in touch"ன்னு சொன்னா சரி நான் உன்கூட வந்து தங்கவா இல்ல நீ இங்க வரியான்னு கேட்டேன். பிளாக் பண்ணிட்டா. ஸ்டுபிட் கேர்ள்
 
டானிக் பாட்டில்ல shake well before useனு போட்ருக்கு, கெணத்த போய் எப்டி உலுக்குரதுன்னு டாக்ட்டர்ட்ட கேட்டா ஒரு மாதிரியா பாக்றார்.
 
பார்க்கும் பெண்களையெல்லாம் ரசிக்கச் சொல்கிறது வயது. உன்னுடன் மட்டும்தானடி வசிக்கச் சொல்கிறது மனது.
 
      
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக